மராட்டிய மாநிலத்தில் எந்த நேரத்திலும் சட்டப்பேரவைக்கு இடைக்கால தேர்தல் ஏற்படலாம் : சரத்பவார்
மும்பை: மராட்டிய மாநிலத்தில் இடைக்கால தேர்தலுக்கு தயராக இருக்குமாறு தேசியவாத காங்கிரஸ் கட்சியினரை சரத்பவார் கேட்டுக்கொண்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது. அலிபாக் என்னும் இடத்தில் கட்சியினரிடையே உரையாற்றிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கு பிந்தைய அரசியல் நிலைமை நிலையற்றதாக உள்ளது என்று அவர் கூறியுள்ளார். எனவே எந்த நேரத்திலும் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடத்த வாய்ப்பு ஏற்படலாம் என்று அவர் கூறியுள்ளார்.
தற்போதைய பாஜக அரசு நீண்ட நாளுக்கு நிலைத்திருக்க வாய்ப்பு இல்லை என்று சரத்பவார் தெரிவித்துள்ளார். மாநிலத்தில் அரசை பாதுகாக்கும் பொறுப்பு தேசியவாத காங்கிரசுக்கு இல்லை என்று அவர் கூறியுள்ளார்.
பட்னாவில் அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தருவதாக தெரிவித்திருந்த பவார் கட்சி திடீரென தனது நிலையை மாற்றி கொண்டிருப்பது மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே பாஜக அரசை சிவசேனா ஆதரிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மராட்டிய மாநிலத்தில் எந்த நேரத்திலும் சட்டப்பேரவைக்கு இடைக்கால தேர்தல் ஏற்படலாம் : சரத்பவார்
Category:
0 comments