மோடிக்கு வரும் கூட்டம் உண்மையா? : குர்ஷித் சந்தேகத்துக்கு அருண் ஜெட்லி பதிலடி
புதுடெல்லி: வெளிநாடுகளில் பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சை கேட்க குவியும் கூட்டம் உண்மையானதா என சந்தேகத்தை கிளப்பிய காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித்துக்கு, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பதிலடி கொடுத்துள்ளார்.காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருமான சல்மான் குர்ஷித் இரு தினங்களுக்கு முன் அளித்த பேட்டியில், ‘நான் அமைச்சராக இருந்த போது 2 முறை மியான்மரின் நே பி டா நகருக்கு சென்றிருக்கிறேன். அங்குள்ள வீதிகளில் ஆள்நடமாட்டமே இருக்காது. அப்படிப்பட்ட ஊரில் பிரதமர் மோடியின் பேச்சை கேட்க எப்படி 20,000 பேர் கூடினார்கள் என்பது சந்தேகமாக உள்ளது. அவர் வெளிநாடு செல்லும் போது, கூடவே ஒரு பெரும் கூட்டத்தையும் கூட்டிச் செல்கிறார்‘ என கிண்டலாக கூறியிருந்தார்.
இதற்கு பாஜவின் பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி நேற்று அளித்த பேட்டியில், ‘சல்மான் குர்ஷித் மற்றும் அவரது கட்சி சகாக்களின் அவல நிலையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. சல்மான் கட்சியின் தலைவர்களுக்கு இந்தியாவில் உள்ள ஆதரவாளர்களை காட்டிலும், ஆஸ்திரேலியாவின் சிட்னியில் பிரதமர் மோடிக்கு அதிக ஆதரவாளர்கள் இருக்கிறார்கள் என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்‘ என கூறி உள்ளார். தற்போது மோடி 3 நாள் அரசு முறை பயணமாக ஆஸ்திரேலியாவில் உள்ளார். சிட்னியில் நேற்று நடந்த இந்திய வம்சாவளியினர் கூட்டத்தில் மோடியின் பேச்சை கேட்க 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குவிந்தது குறிப்பிடத்தக்கது.
மோடிக்கு வரும் கூட்டம் உண்மையா? : குர்ஷித் சந்தேகத்துக்கு அருண் ஜெட்லி பதிலடி
Category:
0 comments