ஜார்க்கண்ட்டில் தேர்தலுக்கு பிறகு மெகா கூட்டணி ஆட்சி அமைக்கும் : லாலு பிரசாத் கணிப்பு

Unknown | செவ்வாய், நவம்பர் 18, 2014 | 0 comments

Lalu-1ஹூசைனாபாத்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் 5 கட்டமாக வரும் 25ம் தேதி தொடங்க உள்ளது. இதில், ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்சா, பாஜ கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. காங்கிரசும், லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளமும் கூட்டணி அமைத்துள்ளது. காங்கிரசுடன் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாததால், ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்சா தனித்து போட்டியிடுகிறது. இந்நிலையில், லாலு நேற்று அளித்த பேட்டியில், ‘ஆளுங்கட்சியுடன் தேர்தலுக்கு முன் மீண்டும் கூட்டணியை ஏற்படுத்திக் கொள்ள இயலவில்லை. ஆனாலும், தேர்தலுக்கு பின் உருவாகும் மெகா கூட்டணியே ஜார்க்கண்ட்டில் ஆட்சி செய்யும். கறை படிந்த வேட்பாளர்களை பாஜ களமிறக்கி உள்ளது. அவர்களை மக்கள் நிச்சயம் புறக்கணிப்பார்கள். அவர்களுக்கு ஓட்டு போட்டால், கார்ப்பரேட் நிறுவனங்களை உள்ளே புகுத்தி ஊழல் செய்வார்கள்‘ என்றார்.


Ôஊழல் வழக்கில் தண்டனை பெற்றவர்Õ: இதற்கிடையே, லாலுவின் முன்னாள் உதவியாளரும், மக்களவை தேர்தலின் போது பாஜவில் இணைந்து தற்போது மத்திய இணை அமைச்சராகி உள்ள ராம் கிருபால் யாதவ், தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசுகையில், ‘கால்நடை தீவன ஊழல் வழக்கில் சிக்கி போட்டியிடவே தகுதியை இழந்தவர்தான் லாலு. அவர் கட்சி தொண்டர்களின் தலைவர் இல்லை. அவரது குடும்பத்தினரின் தலைவன். அவரது மகளுக்கு சீட் தருவதற்காக என்னை ஒதுக்கியதை எல்லோருமே அறிவர். ஜார்க்கண்ட் மாநிலம் வளர்ச்சி பெற வேண்டுமெனில் பாஜவுக்கு வாக்களியுங்கள்‘ என்றார். கட்சிகளின் முரண்பாடு அமித் ஷா குற்றச்சாட்டு: பாஜ தேசிய தலைவர் அமித் ஷா கூறுகையில், ‘ஜார்க்கண்ட் அரசியலில் பெரும் முரண்பாடு நிலவுகிறது. ஆளுங்கட்சிக்கு ஆதரவு தருகிறார்கள், ஆனால் கூட்டணி சேரமாட்டேன் என்கிறது காங்கிரஸ். இவர்கள் எப்படி தேர்தல் பிரசாரம் செய்வார்கள். பாஜவுக்கு வாய்ப்பளித்தால், மாநிலத்தில் தடைபட்டுக் கிடக்கும் வளர்ச்சித் திட்டங்களை முறையாக செயல்படுத்துவோம்‘ என்றார்.



ஜார்க்கண்ட்டில் தேர்தலுக்கு பிறகு மெகா கூட்டணி ஆட்சி அமைக்கும் : லாலு பிரசாத் கணிப்பு

Category:

0 comments