ஆவின்பால் கலப்பட வழக்கில் வைத்தியநாதன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்
விழுப்புரம்: ஆவின்பால் கலப்பட வழக்கில் வைத்தியநாதன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. விழுப்புரம் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தனர். குற்றப்பத்திரிக்கையில் வைத்தியநாதன் மனைவி உட்பட 23 பேர் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. விழுப்புரம் நீதிமன்றத்தில் நீதிபதி குமார் சரவணன் முன் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வைத்தி கைதான 59வது நாளில் குற்றப்பத்திரிக்கை தாக்கலாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 59 நாட்களாக கடலூர் மத்திய சிறையில் வைத்தியநாதன் அடைக்கப்பட்டுள்ளார்.
வைத்தி மனைவி கைது?
வைத்தியநாதன் மனைவி ரேவதியை வழக்கில் புதிதாக சிபிசிஐடி போலீசார் சேர்த்துள்ளனர். வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதை அடுத்து ரேவதி கைது செய்யப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஆவின் வழக்கில் வைத்தியநாதன் உட்பட 19 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆவின் வழக்கு விவரம்
ஆவின் நிறுவனத்திற்கு சப்ளை செய்த பாலில் தண்ணீர் கலந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியூரில் இருந்து லாரியில் பால் கொண்டு வரும்போது தண்ணீர் கலக்கப்பட்டது அம்பலமாகியுள்ளது. லாரியை மறைவிடத்தில் நிறுத்தி தண்ணீர் கலந்தது கையும் கலவுமாக கண்டுபிடிக்கப்ட்டது. மேலும் விசாரணையில் தண்ணீர் கலப்பு மூலம் பல கோடி ரூபாய் சம்பாதித்ததும் தெரியவந்துள்ளது. இதில் வைத்தி ஆவினில் பால் சப்ளை செய்யும் ஒப்பந்தத்தை பெற்றுள்ளார்.
ஆவின்பால் கலப்பட வழக்கில் வைத்தியநாதன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்
Category:
0 comments