உயிரை பறிக்கும் சாலைகள்; சாலை விபத்தில் தமிழகம் முதல் இடம்: பாதுகாப்பிற்கு முன்னுரிமை இல்லை

Unknown | செவ்வாய், நவம்பர் 18, 2014 | 0 comments

raபுதுடெல்லி: சாலைப் பாதுகாப்பு மற்றும் சாலை விபத்துகளால் உயிர் சேதம் அடைவதை தவிர்ப்பது குறித்த ஆய்வினை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு இதுகுறித்த ஆய்வினை மேற்கொண்டு விசாரணை நடத்தி வரும் நிலையில், சில முக்கிய மாநில அரசுகள் சாலைப் பாதுகாப்பு மற்றும் உயிர்ச்சேதம் குறித்த குழுவின் அறிக்கைக்கு பதிலளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.


தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத், மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், ஜர்ர்க்கண்ட் உள்ளிட்ட மாநில அரசுகள் உச்சநீதிமன்ற குழுவின் கேள்விக்கு பதிலளிக்க மறுத்துள்ளன. மேலும் சில மாநில அரசுகள் எப்படி இதுகுறித்த அறிக்கை கேட்கலாம் என்று கேள்வி எழுப்பியுள்ளதாக அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர்.


மேலும் தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்டவை பட்டியலில் முதல் 3 இடங்களை பெற்றுள்ள மாநிலங்கள் ஆகும். மேலும் இதில் தமிழ்நாடு மற்றும் மகாராஷ்ரா மாநிலங்கள் 23% சாலை விபத்தினை பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் இந்த குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, டெல்லி, உத்திரப்பிரேதசம், ராஜஸ்தான், பஞ்சாப், பீகார் உள்ளிட்ட 8 மாநிலங்கள், சாலை விபத்து, சாலைப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை குறைந்த அளவிலேயே பெற்றுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன்மூலம் உச்சநீதிமன்றம், மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்து மாநில அரசுகளின் சாலைப் பாதுகாப்பு நடவடிக்கை மற்றும் விழிப்புணர்வு மூலம் விபத்துகளை குறைக்க ஆய்வினை மேற்கொண்டு அறிக்கையை சமர்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



உயிரை பறிக்கும் சாலைகள்; சாலை விபத்தில் தமிழகம் முதல் இடம்: பாதுகாப்பிற்கு முன்னுரிமை இல்லை

Category:

0 comments