தனுஷை கலாய்த்த அமைரா

Unknown | செவ்வாய், நவம்பர் 18, 2014 | 0 comments

amசென்னை: நான் தேசிய விருது வாங்கி இருக்கேன் நீங்க வாங்கி இருக்கீங்களா என்று நடிகை அமைராவை கிண்டல் செய்தார் தனுஷ்.கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் அனேகன். அமைரா ஹீரோயினாக அறிமுகமாகிறார். அவர் கூறியது:எனக்கு எப்போதுமே போட்டி மனப்பான்மை உண்டு. அந்த போட்டி தனுஷுடன் நடிக்கும்போதும் ஏற்பட்டது. ஒவ்வொரு சீன் நடிக்கும்போதும் அவரிடம், ‘உங்களைவிட நான்தான் நல்லா நடிச்சிருக்கேன்’ என்று சொல்வேன். அவர் சிரித்துக்கொள்வார். இதேபோல் அடிக்கடி சொன்னபோது என்னையே பார்த்துக்கொண்டிருந்தார். ஏன் அப்படி பாக்கிறீங்க என்று கேட்டேன். உடனே அவர் நான் நடிப்புக்காக தேசிய விருது வாங்கி இருக்கேன். நீ தேசிய விருது வாங்கி இருக்கியா? என்று கேட்டார். அதன்பிறகு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திணறினேன். சமாளித்துக்கொண்டு உங்களுக்கு 30 வயது ஆயிடுச்சி. எனக்கு 21தான் ஆகிறது. நானும் விருது வாங்குவேன் அதற்கு நேரம் இருக்கு என்று கூறி சமாளிப்பேன். ஷூட்டிங் முழுவதுமே தனுஷுடன் இப்படித்தான் ஜாலியாக பேசிக்கொண்டிருந்தேன். அவருடன் நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது.இவ்வாறு அமைரா கூறினார்.



தனுஷை கலாய்த்த அமைரா

Category:

0 comments