பாதுகாவலர்கள் இல்லாமல் ஐஸ்வர்யா ராய் ரகசிய பயணம்
பெங்களூர்: பாதுகாவலர்கள் இல்லாமல் ஐஸ்வர்யா ராய் சொந்த ஊருக்கு ரகசிய பயணம் மேற்கொண்டார்.ஐஸ்வர்யா ராய் எங்கு சென்றாலும் அவருக்கு பாதுகாப்பாக செக்யூரிட்டிகள் வருவார்கள். யாரும் அவரை நெருங்க முடியாதபடி பாதுகாப்பு வளையம் அமைத்து அழைத்துச் செல்வது வழக்கம். ஆனால் பாதுகாவலர்கள் யாரும் இல்லாமல் சில தினங்களுக்கு முன் ஐஸ்வர்யா ராய் தனது குழந்தை ஆராத்யாவுடன் கர்நாடக மாநிலம் மங்களூர் வந்தார். அங்கிருந்து குத்லா நகருக்கு சென்றார். அவரது சகோதரி நந்திதா ஷெட்டியின் குழந்தை பெயர் சூட்டு விழாவில் கலந்துகொண்டார். நேராக நட்சத்திர ஓட்டலுக்கு வந்த அவரை உறவினர்கள் வரவேற்று அழைத்துச் சென்றனர். ஐஸ்வர்யா ராய் பிறந்த ஊர் குத்லா. நீண்ட நாட்களுக்கு பிறகு அங்கு வந்ததால் இளவயது நினைவுகளை உறவினர்களுடன் பகிர்ந்துகொண்டார். மேலும் ஆராதயா பிறந்த பிறகு முதன்முறையாக சொந்த ஊருக்கு ஐஸ்வர்யா வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விழா நிகழ்ச்சி முடிந்தபிறகு காரில் மங்களூர் வந்தார். பின்னர் அங்கிருந்து மும்பை புறப்பட்டு சென்றார். அப்போதும் தன்னுடன் பாதுகாவலர்கள் யாரும் வரக்கூடாது என்று அவர் கூறிவிட்டார்.
பாதுகாவலர்கள் இல்லாமல் ஐஸ்வர்யா ராய் ரகசிய பயணம்
Category:

0 comments