அஜாக்கிரதையாக எல்லைக்கட்டுபாட்டு பகுதியை கடந்த இந்திய சிறுவனை திரும்ப ஒப்படைத்தது பாகிஸ்தான் ராணுவம்

Unknown | செவ்வாய், நவம்பர் 18, 2014 | 0 comments

Army Borderஇஸ்லமாபாத்,


இந்தியா – பாகிஸ்தான் சர்வதேச எல்லைப்பகுதியில் அமைந்துள்ள எல்லைக்கட்டுபாட்டு பகுதியை அஜாக்கிரதையாக  கடந்த 13 வயது இந்திய சிறுவனை பாகிஸ்தான் ராணும் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்தது.


காஷ்மீர் மாநிலத்தின் ஜான்நாகர் கிராமத்தை சேர்ந்த மன்சார் ஹூசைன் என்ற 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன், குயீ ரட்டா பகுதியில் உள்ள எல்லைக்கட்டுபாட்டு பகுதியை கடந்த நவம்பர் 14 ஆம் தேதி  தவறுதலாக கடந்து சென்று விட்டான்.அவனை ஷகோதி- உரி பகுதியில் உள்ள இந்திய ராணுவ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக  பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.


அஜாக்கிரதையாக எல்லைக்கட்டுபாட்டு பகுதியை கடந்த இந்திய சிறுவனை திரும்ப ஒப்படைத்தது பாகிஸ்தான் ராணுவம்

Category:

0 comments