ஏ.டி.பி உலக டூர் பைனல்ஸ் : 4-வது முறையாக ஜோகோவிச் சாம்பியன்

Unknown | செவ்வாய், நவம்பர் 18, 2014 | 0 comments

jலண்டன்: ஏடிபி உலக டூர் பைனல்ஸ் தொடரின் ஒற்றையர் பிரிவில், நம்பர் 1 வீரர் நோவாக் ஜோகோவிச் (செர்பியா) 4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார். உலக தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள வீரர்கள் மற்றும் ஜோடிகள் பங்கேற்ற இந்த டென்னிஸ் தொடர், லண்டனில் உள்ள ளி2 அரங்கில் கடந்த 9ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் விளையாட ஜோகோவிச், ரோஜர் பெடரர் (சுவிஸ்) தகுதி பெற்றிருந்தனர். இந்த நிலையில், இறுதிப் போட்டி தொடங்குவதற்கு சற்று முன்பாக காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகுவதாக பெடரர் அறிவித்தார். ‘முழு உடல்தகுதி இல்லாத நிலையில் களமிறங்க விரும்பவில்லை. இதற்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்’ என்றார் பெடரர்.


இதையடுத்து, ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து 3வது முறையாக ஏடிபி உலக டூர் பைனல்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று ஹாட்ரிக் சாதனை படைத்த ஜோகோவிச், இந்த கோப்பையை 4வது முறையாகக் கைப்பற்றி அசத்தினார். அவர் 2008, 2012, 2013, 2014ல் சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, நாஸ்டேஸ் 197173ல் ஹாட்ரிக் சாதனை படைத்திருந்தார். அவருக்கு பிறகு இந்த சாதனையை நிகழ்த்தும் முதல் வீரர் என்ற பெருமை ஜோகோவிச்சுக்கு கிடைத்துள்ளது. இரட்டையர் பிரிவில் அமெரிக்காவின் பாப் பிரையன் மைக் பிரையன் சகோதரர்கள் 4வது முறையாக ஏடிபி உலக டூர் பைனல்ஸ் கோப்பையை கைப்பற்றி அசத்தினர். இறுதிப் போட்டியில் இவான் டோடிக் மார்செலோ மெலோ ஜோடியுடன் மோதிய பிரையன் சகோதரர்கள் 67 (57), 62, 107 என்ற செட் கணக்கில் போராடி வென்றனர்.



ஏ.டி.பி உலக டூர் பைனல்ஸ் : 4-வது முறையாக ஜோகோவிச் சாம்பியன்

Category:

0 comments