ஐசிசி ஒரு நாள் தர வரிசை : 2ம் இடத்தில் விராட் கோஹ்லி

Unknown | செவ்வாய், நவம்பர் 18, 2014 | 0 comments

Virat_Kohli3துபாய்: இலங்கைக்கு எதிரான தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தியாவின் விராட் கோஹ்லி ஐசிசி தர வரிசை பட்டியலில் 2ம் இடத்துக்கு முன்னேறி உள்ளார்.ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான ஐசிசி தர வரிசை பட்டியல் துபாயில் வெளியிடப்பட்டது. இதில், இந்திய பேட்ஸ்மேன் விராட் கோஹ்லி இரண்டாமிடத்துக்கு முன்னேறி உள்ளார்.இலங்கைக்கு எதிரான தொடரில் விராட் கோஹ்லியின் சிறப்பான பேட்டிங் தர வரிசையில் அவர் உயர காரணமாக இருந்தது.கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த ஐந்தாவது ஒரு நாள் போட்டியில் ஆட்டமிழக்காமல் 139 ரன்கள் அடித்த கோஹ்லி, முந்தைய போட்டிகளில் 66, 53, 49 ரன்களை எடுத்ததுடன், தொடர் நாயகன் விருதையும் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

அவர் ஐசிசி தர வரிசை பட்டியலில் தென்னாப்பிரிக்காவின் ஏபி டிவில்லியர்ஸை விட ஒரு இடம் மட்டுமே பின் தங்கி உள்ளார்.இந்திய பேட்ஸ்மேன் ரோகித் சர்மா கொல்கத்தாவில் நடந்த போட்டியில் 264 ரன்களைக் குவித்து உலக சாதனையை முறியடித்ததன் மூலம் தர வரிசை பட்டியலில் 18 இடங்கள் முன்னேறி 15ம் இடத்தில் உள்ளார். ஷிகர் தவான் தொடர்ந்து ஐந்தாம் இடத்திலும், இலங்கைக்கு எதிரான போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்த மகேந்திர சிங் டோனி 7ம் இடத்திலும் நீடித்து வருகின்றனர்.


பந்து வீச்சு தர வரிசையில் இந்திய பவுலர் புவனேஸ்வர் குமார் 8ம் இடத்திலும், ரவீந்திர ஜடேஜா 10ம் இடத்திலும் உள்ளனர். இருவரும் தர வரிசையில் 2 இடங்களை இழந்துள்ளனர்.அஸ்வின் ஒரு இடம் முன்னேறி 15வது இடத்தில் உள்ளார்.இலங்கை அணியைப் பொருத்தவரை கொல்கத்தா, ராஞ்சி போட்டிகளில் அரை சதம் (முறையே 59, 52 ரன்கள்) அடித்த லாஹிரு திரிமன்னே 4 இடங்கள் முன்னேறி 46வது இடத்தில் உள்ளார். இலங்கை கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ், இந்தியாவுக்கு எதிரான தொடரில், ஆட்டமிழக்காமல் 139 ரன்கள் மற்றும் 2 அரை சதங்களுடன் (75, ஆட்டமிழக்காமல் 92) ஆகியவற்றுடன் 339 ரன்களைச் சேர்த்ததுடன், பேட்டிங்கில் தொடர் சராசரி 113.00 ஆக உள்ளதால், ஆல் ரவுண்டர்கள் பிரிவில் முதல் முறையாக முதலிடத்தைக் கைப்பற்றியுள்ளார். பேட்டிங் தர வரிசையில் அவர் 4 இடங்கள் முன்னேறி 10ம் இடத்தில் உள்ளார்.



ஐசிசி ஒரு நாள் தர வரிசை : 2ம் இடத்தில் விராட் கோஹ்லி

Category:

0 comments