பொன்.ராதாகிருஷ்ணனுக்கு உற்சாக வரவேற்பு
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்குவதை சகித்துக் கொள்ள முடியாது என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மத்திய கனரக தொழிற்துறை இணை அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக சென்னை வந்த பொன்.ராதாகிருஷ்ணனுக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பில் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழத்தின் வளர்ச்சி திட்டங்களுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளிக்கும் என்று கூறினார்.
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை சகித்துக் கொள்ள முடியாது என்று கூறிய அவர் சேது சமுத்திர திட்டம் பற்றி ஆய்வு செய்த பின்னர் முடிவு எடுக்கப்படும் என்றார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடகம் எதிர்ப்பு தெரிவித்து அம்மாநில முதலமைச்சர் உள்ளிட்டோர், பிரதமர் மோடியை சந்திக்க உள்ளது பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு மேலாண்மை வாரியம் அமைக்க தொடர்ந்து வலியுறுத்துவேண் என்றார். ஆப்கானில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட பாதிரியாரை மீட்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பொன்.ராதாகிருஷ்ணனுக்கு உற்சாக வரவேற்பு
Category:

0 comments