மீடியாக்கள் தவறாகவே செய்தி வெளியிடுகிறது - ஆம் ஆத்மி கட்சி

Unknown | சனி, ஜூன் 07, 2014 | 0 comments

Kejriwalஆம் ஆத்மி பற்றி மீடியாக்கள் தவறாகவே செய்தி வெளியிடுகிறது என ஆம் ஆத்மி கூறியுள்ளது. மேலும் மீடியாக்கள் வெளியிடும் செய்தி குறித்து நம்ப முடியவில்லை எனவும் கூறியுள்ளது.


ஆம் ஆத்மியில் முக்கிய தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக வெளியேறி வருகின்றனர். இதனால் அக்கட்சியினர் செய்வதறியாது திணறி வருகின்றனர். இந்நிலையில், தலைவர்கள் ராஜினாமா செய்தது பற்றி அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் டில்லியில் கூடி ஆலோசனை நடத்தினர்.


இந்நிலையில், கட்சிக்குள் தற்போது ஏற்பட்ட குழப்பத்தை சமாளிக்க ஆம் ஆத்மி தலைவர்கள் முயற்சி செய்து வருகின்றனர். கட்சி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவாலை யோகேந்திர யாதவ் விமர்சித்திருந்தார். இது தொடர்பாக பதிலளித்த மணிஷ் சிசோடியா, கட்சிக்குள் நடக்கும் விவகாரங்களை வெளியில் சொல்லக்கூடாது என கூறியிருந்தார். இதனிடையே ஆம் ஆத்மிக்குள் ஏற்பட்டுள்ள பிளவு குறித்து பதிலளிக்க கெஜ்ரிவாலும், யோகேந்திர யாதவும் மறுத்துவிட்டனர்.


ஆம் ஆத்மியின் கோபால் ராய் கூறுகையில், யோகேந்திர யாதவின் ராஜினாமா இன்னும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என கூறினார்.


இதன் பின்னர் அக்கட்சி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், கட்சியில் பிளவு ஏதுமில்லை எனவும், அனைவரும் ஒற்றுமையாக உள்ளதாக கூறியுள்ளது. மேலும் யாரிடமும் கருத்து வேறுபாடோ, பிரச்னையோ ஏதுமில்லை எனவும், ராஜினாமா குறித்து விவாதிக்கப்பட்டதாகவும், யாருடைய ராஜினாமாவும் ஏற்கப்படவில்லை எனவும், ஷாஜியா இல்மி கட்சிக்கு திரும்பினால் மகிழ்ச்சியடைவோம் எனவும் கூறப்பட்டுள்ளது.


மேலும்,மணிஸ் சிசோடியாவும், யோகாந்திர யாதவும் கட்சியின் மதிப்பு மிக்க தலைவர்கள் என ஆம் ஆத்மி கூறியுள்ளது. மேலும் அவர்கள், தங்களை கருத்துக்களை வெளியிட அவர்களுக்கு உரிமை உண்டு என்றும், கருத்து வேறுபாடு மட்டுமே உள்ளது என்றும், கட்சியில் நிலவும் பிரச்னைகளை விவாதித்து தீர்வு காண முயற்சித்து வருவதாகவும் , கட்சியில் நிலவும் பிரச்னை பற்றி கெஜ்ரிவால் உரிய நேரத்தில் விளக்கமளிப்பார் எனவும் கூறியுள்ளது.



மீடியாக்கள் தவறாகவே செய்தி வெளியிடுகிறது - ஆம் ஆத்மி கட்சி

Category:

0 comments