016ஆம் ஆண்டிற்குள் விமானத்தில் அதிவேக இண்டர்நெட் இணைப்பு

Unknown | சனி, ஜூன் 07, 2014 | 0 comments

Airஐரோப்பிய நாடுகளில் இன்னும் இரண்டு ஆண்டுகளில் விமானத்தில் பயணம் செய்பவர்கள் அதிகபட்ச வேகத்தில் பயன்படுத்தக்கூடிய இண்டர்நெட் இணைப்பை உபயோகிக்கலாம் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.


லண்டன் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிரபல சாட்டிலைட் ஆபரேட்டர் நிறுவனம் Inmarsat, ஐரோப்பிய நாடுகளில் உள்ள விமானப்பயணிகளுக்கான இண்டர்நெட் இணைப்பை வழங்குவதற்கான உரிமையை பெற்றுள்ளது. 2016ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்து விமானப்பயணிகள் அதிவேக இண்டர்நெட் இணைப்பை பெற முடியும். இதன்மூலம் விமானப்பயணிகள் விமானத்தில் பறந்துகொண்டே தங்கள் மொபைல் போன், லேப்டாப் மூலம் இண்டர்நெட் இணைப்பை சாதாரண கட்டணத்திலேயே பெற முடியும்.


விமானப்பயணிகள் இண்டரெட் உபயோகப்படுத்த தனி சாட்டிலைட் மூலம் இணைப்பு தரவுள்ளதால் இண்டர்நெட்டின் வேகம் சூப்பர் பாஸ்ட்டாக இருக்கும் என Inmarsat, நிறுவனம் கூறியுள்ளது. High-speed flight broadband என்ற பெயரில் இயங்கவுள்ள இந்த திட்டம் 2016ஆம் ஆண்டுமுதல் செயல்படத்தொடங்கும். அப்புறம் என்ன ஃபேஸ்புக்கை இனி விமானத்தில் பறந்துகொண்டே உபயோகப்படுத்தலாம்.



016ஆம் ஆண்டிற்குள் விமானத்தில் அதிவேக இண்டர்நெட் இணைப்பு

Category:

0 comments