ஆந்திர முதலமைச்சராக நாளை பதவியேற்கிறார் சந்திரபாபு நாயுடு
ஆந்திர முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு நாளை பதவியேற்க உள்ள நிலையில் குண்டூரில் வரலாறு காணாத அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளது. பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட 5,000 முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் பாதுகாப்பு ஏற்பாடுகளில் அதீத கவனம் செலுத்தப்படுகிறது. நாளை மாலை 7 மணிக்கு மேல் நடைபெறும் விழாவுக்காக விஜயவாடா, குண்டூர் இடையே அமைந்துள்ள நாகர்ஜுனா பல்கலைக்கழகம் அருகே பிரம்மாண்டமான விழா அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர்கள், தமிழகம், தெலுங்கானா உள்ளிட்ட 17 மாநிலங்களின் முதலமைச்சர்கள் பதவியேற்பு விழாவுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் விஜயவாடா விமான நிலையத்திலிருந்து பதவியேற்பு அரங்கு வரை போலீசார் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டுள்ளனர். மேலும் முக்கிய பிரமுகர்கள் விஜயவாடா விமான நிலையத்திலிருந்து விழா அரங்கிற்கு வர வசதியாக மூன்று ஹெலிகாப்டர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
ஆந்திர முதலமைச்சராக நாளை பதவியேற்கிறார் சந்திரபாபு நாயுடு
Category:

0 comments