இந்தியா-பாகிஸ்தான் இடையே சமரசப் பேச்சுவார்த்தை தேவை - அமெரிக்க
இந்தியாவும்-பாகிஸ்தனும் இருதரப்பு உறவை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை தொடர வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்புடன் நடந்த பேச்சுவார்த்தையில் இருதரப்பு உறவை வலுப்படுத்த இசைவு தெரிவிக்கப்பட்டது. இரு நாட்டு வெளியுறவுத்துறை அதிகாரிகள் மட்டத்தில் விரைவில் பேச்சு நடக்கும் என்று அப்போது அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை துணை செய்தித் தொடர்பாளர் மேரி ஹாக் இந்தியா-பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் இரு தரப்பு உறவை மேம்படுத்த முயற்சிகளை மேம்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இரு நாடுகளும் இந்த முயற்சிகளை மேற்கொள்ளும் என்று நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இரு நாடுகளுக்கும் நன்மை பயக்கும் இந்த நடவடிக்கையை உடனடியாக மேற்க்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியா-பாகிஸ்தான் இடையே சமரசப் பேச்சுவார்த்தை தேவை - அமெரிக்க
Category:

0 comments