ஸ்மிரிதி இரானிக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன்
மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி மீது தொடரப்பட்ட மான நஷ்ட வழக்கில் அவருக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன் அளித்துள்ளது.நாடாளுமன்ற தேர்தலுக்கு பின், பிரதமர் நரேந்திர மோடியோடு மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சராக ஸ்மிரிதி இரானி பதவி ஏற்றுக்கொண்டார்.
இவரது கல்வி தகுதி குறித்து எழுந்த சர்ச்சை சற்றே தணிந்துள்ள நிலையில், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது தன்னை பற்றி உண்மைக்கு மாறாகவும், தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்ததாக ஸ்மிரிதி இரானி மீது காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிரூபம் தொடர்ந்த மான நஷ்ட வழக்கில் ஸ்மிரிதிக்கு சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு செப்டம்பர் 27 ஆம் தேதி ஸ்மிரிதி இரானி ஆஜராகுமாறு டெல்லி நீதிமன்றம் உத்தரவிடுள்ளதாக தெரிகிறது.
ஸ்மிரிதி இரானிக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன்
Category:

0 comments