பெண் குழந்தை பெற்றதால் மனைவிக்கு எலக்ட்ரிக் ஷாக் கொடுத்த கணவன் கைது
துருக்கி நாட்டில் உள்ள ஒருவர் தனது மனைவி பெண் குழந்தை பெற்றேடுத்த கோபத்தில் மனைவி தூங்கிக்கொண்டிருந்தபோது, அவருக்கு எலக்ட்ரிக் ஷாக் தண்டனை கொடுத்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
துருக்கியில் உள்ள southeastern Diyarbakir province என்ற பகுதியில் 29 வயது நபர் ஒருவர், தனது மனைவியை பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேர்த்திருந்தார். அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. ஆண் குழந்தையை எதிர்பார்த்திருந்த கணவர், பெண் குழந்தை என்றதும் சோகமானார்.
பெண் குழந்தை பெற்றெடுத்த மனைவிக்கு கடும் தண்டனை கொடுக்க முடிவு செய்த அவர், அங்கிருந்த வயரை எடுத்து பிளக்கில் செருகி, அதன் மறுமுனையை தூங்கிக்கொண்டிருந்த மனைவி மீது வைத்து மின்சாரத்தை அவரது உடம்பினுள் செலுத்தினார். இதனால் அலறித்துடித்து பலத்த காயமடைந்த அவருடைய மனைவி, தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார். இந்த தகவல் துருக்கியில் உள்ள ஊடகம் ஒன்றில் வெளிவந்ததால், போலீஸார் கணவரிடம் விசாரணை செய்து வருகின்றனர். அவருடைய மனைவி தனது கணவருக்கு எதிராக புகார் செய்ய மறுப்பதால் போலீஸார் இந்த வழக்கில் அவரை கைது செய்ய முடியாமல் உள்ளனர்.
பெண் குழந்தை பெற்றதால் மனைவிக்கு எலக்ட்ரிக் ஷாக் கொடுத்த கணவன் கைது
Category:

0 comments