கராச்சி விமான நிலையத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு மோடியே காரணம் - தீவிரவாத இயக்கம்

Unknown | திங்கள், ஜூன் 09, 2014 | 0 comments

Terroristகராச்சி விமான நிலையத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் உள்பட மொத்தம் 27 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் இந்த தாக்குதலின் பின்னணியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் புதிய பாதுகாப்பு குழு உள்ளதாக பாகிஸ்தான் தீவிரவாத இயக்கத் தலைவர் ஹஃபீஷ் சையத் குற்றம் சாட்டியுள்ளார்.


கராச்சியில் உள்ள ஜின்னா சர்வதேச விமான நிலையத்திற்குள், விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் போல் உடையணிந்து நுழைந்த தீவிரவாதிகள், துப்பாக்கி மற்றும் கையெறி வெடிகுண்டுகளைக் கொண்டு கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர்.


10 தீவிரவாதிகள் வரை இந்த தாக்குதலை நடத்தியதாக கூறப்பட்ட நிலையில், இத்தாக்குதலை அடுத்து, அங்கு விமான சேவை நிறுத்தப்பட்டு, அனைத்து வழிகளும் மூடப்பட்டன. தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. நேற்று இரவு தொடங்கி இன்று காலை வரை நடைபெற்ற கடும் துப்பாக்கிச் சண்டைக்கு பின்னர் சில தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், மீதமுள்ள தீவிரவாதிகள் தங்களது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து உயிரிழந்தனர். இதனையடுத்து நீண்டநேரம் தீவிரவாதிகளின் முற்றுகையிலிருந்த கராச்சி விமான நிலையம், அவர்களது பிடியிலிருந்து மீண்டு பாதுகாப்பு படையினர் வசம் வந்தது.


இதனை செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்திய பாதுகாப்பு படை செய்தி தொடர்பாளர், தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் 10 பேரும் 20 முதல் 25 வயதுடையவர்கள் என்றும், அவர்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்து பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவித்தனர். இதனிடையே இந்த தாக்குதலுக்கு தாங்கள்தான் காரணம் என தெஹ்ரீக் – இ – தாலிபான் என்ற தீவிரவாதஇயக்கம் பொறுப்பேற்றது.


இந்நிலையில், மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவரும், ஜமாத் உத் தவா என்ற பெயரில் பாகிஸ்தானில் இயங்கும் தீவிரவாத இயக்கத்தின் தலைவருமான ஹஃபீஷ் சையத், இந்தியாவால் தொடுக்கப்பட்ட இந்த போரின் பின்னணியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் புதிய பாதுகாப்பு குழுவினர் உள்ளதாகவும், உண்மையான எதிரி யார் என்பதை பாகிஸ்தான் உணர்ந்துகொள்ள வேண்டும் என்றும் தனது டுவிட்டர் தளத்தில் கூறியுள்ளார்.


அதேப்பொன்று ஜமாத் உத் தவா தீவிரவாத இயக்கம் தனியாக விடுத்துள்ள டுவிட்டர் செய்தியில், கராச்சி விமான நிலையத்தின் மீதான தாக்குதல் பாகிஸ்தானுக்கு எதிரான மோடியின் திட்டம் என்றும், புதிய ‘இந்துத்வா அரசின்’ நேரடியான பதிலடி என்றும் கூறப்பட்டுள்ளது.



கராச்சி விமான நிலையத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு மோடியே காரணம் - தீவிரவாத இயக்கம்

Category:

0 comments