பவுச்சார்ட்டுக்கு கவுரவம்

Unknown | செவ்வாய், நவம்பர் 18, 2014 | 0 comments

bபெண்கள் டென்னிஸ் சங்கத்தின் சார்பில், இந்த ஆண்டில் மிகவும் முன்னேறிய வீராங்கனையாக கனடாவின் 20 வயதான பவுச்சார்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். விம்பிள்டனில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய பவுச்சார்ட் உலக பெண்கள் சாம்பியன்ஷிப் போட்டிக்கும் முதல் முறையாக தகுதி பெற்று சாதனை படைத்தார். ‘எனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி. ஒவ்வொரு நாளும் நான் முன்னேற்றம் காண முயற்சிக்கிறேன். ஏற்கனவே சில புதிய இலக்குகளை நிர்ணயித்துள்ளேன். அதை நோக்கி அடுத்த ஆண்டில் பயணிப்பேன்’ என்று பவுச்சார்ட் கூறினார்.



பவுச்சார்ட்டுக்கு கவுரவம்

Category:

0 comments