மஞ்சப்பை - திரைவிமர்சனம்
விமல், ராஜ் கிரண், லட்சுமி மேனன் நடித்து வெளிவந்திருக்கும் படமே ‘மஞ்சப் பை’. இப்படத்தை அறிமுக இயக்குனர் ராகவன் இயக்கியுள்ளார். இயக்குனர் சற்குணமும், லிங்குசாமியும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
அப்பா, அம்மாவை சின்ன வயதிலியே இழந்த சிறுவன் விமலை கண்ணும் கருத்துமாக எல்லாமுமாகவும் இருந்து வளர்க்கிறார் அவரது தாத்தா ராஜ்கிரண். இந்நிலையில் வளர்ந்து பெரியவனாகும் விமல் சென்னையில் ஒரு பெரிய ஐ. டி. கம்பெனியில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் தாத்தா ராஜ்கிரண் பேரன் விமலைப் பார்க்க சென்னை வருகிறார். ஆனால் சென்னைக்கு வந்தபிறகு தாத்தா செய்யும் சின்ன சின்ன வெகுளித்தனமான விஷயங்களால் அக்கம்பக்கத்தினர் அவர்மேல் எரிச்சலுடனே இருக்கிறார்கள்.
அதேபோல விமலின் காதலியான லட்சுமி மேனனும் தாத்தாவின் வெள்ளந்தியான மனசைப் புரிந்துகொள்ளாமல் அவரை ஊருக்கே அனுப்பி வைக்க சொல்கிறார். ஆனால் விமலோ அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தாத்தா மீது அன்பாக இருக்கிறார்.
ஆனால் அதே விமலுக்கு தாத்தாவால் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பறிபோய்விட, அதனால் நடு ரோட்டில் தாத்தாவை திட்டிவிட, அதிலிருந்து ராஜ்கிரண் காணாமல் போய்விடுகிறார். விமலோ தவறை உணர்ந்து தாத்தாவைத் தேடி, ஓடி அலைந்து கண்டுபிடிக்க தாத்தா என்னவானார் என்பதே க்ளைமாக்ஸ்.
இதுவரைக்கும் தமிழ் சினிமாவில் ஒரு சீனோ அல்லது ஒரு எபிசொடோ மட்டுமே பார்த்து வந்த நமக்கு தாத்தா பேரன் காம்பினேஷனில் ஒரு நெகிழ்வான கதையை முதல் படமாக தந்ததற்கு இயக்குனர் ராகவனை நிச்சயம் பாராட்ட வேண்டும். ஆனால் கதையில் கவனம் செலுத்திய இயக்குனர் மேக்கிங்கில் கவனம் செலுத்தவில்லைபோலும் என்று நினைக்கும் அளவிற்கு அவ்வளவு சொதப்பல்கள் சீன் பை சீன் ஏதோ நாடகம் பார்ப்பது போன்ற உணர்வு.
படத்தின் முக்கிய ஆணிவேரும் சரி, ஆலமரமும் சரி ராஜ்கிரண்தான். இதுவரை மிரட்டலான வேடங்களிலேயே நடித்து வந்தவர் முதல் முறையாக படம் முழுக்க நம்மை சிரிக்க வைக்கிறார். ஆனாலும் சில இடங்களில் நம்மை கண் கலங்க வைக்கும் நடிப்பையும் இயல்பாக செய்துள்ளார்.
நிச்சயமாக தவமாய் தவமிருந்து படத்திற்குப் பிறகு ராஜ் கிரண் ஒன் மேன் ஷோ காட்டியுள்ள படம் இதுதான் என்று சொல்லலாம்.
விமல் வழக்கம்போல ஹீரோயினிடம் போங்கு வாங்கும் கேரக்டர். தாத்தாவின் சின்ன சின்ன அறியாத் தவறுகளையும் பொறுத்துக் கொண்டாலும் பிறகு தாத்தாவைத் திட்டும் சீனிலும், க்ளைமாக்சில் தாத்தாவின் நிலைகண்டு அழும் இடத்திலும் நடிப்பில் முன்னேறியுள்ளார்.
லட்சுமி மேனன் படத்தில் சொல்வதுபோலவே சில இடங்களில் கிழவிபோல்தான் தெரிகிறார். அதுவும் பல காட்சிகளில் மேக்கப்பே இல்லாமல் ஜூனியர் ஆர்டிஸ்ட் ரேஞ்சில்தான் தெரிகிறார்.
மஞ்சப்பை - திரைவிமர்சனம்
Category:

0 comments