மும்பையில் மெட்ரோ ரயில் நாளை முதல்

Unknown | சனி, ஜூன் 07, 2014 | 0 comments

delhi-metroமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில், வெர்சோவா – அந்தேரி – காட்கோபர் பகுதிகளுக்கு இடையிலான 11.04 கி.மீ. தொலைவிலான மெட்ரோ ரயில் சேவை நாளை அதிகாரப்பூர்வமாக துவக்கி வைக்கப்படுகிறது. 2356 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவங்கப்பட்ட இந்த திட்டம், முடிவடையும் தருவாயில், திட்டச் செலவு 4200 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ரயிலில் பயணிப்பதற்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ. 10 என்றும், அதிகபட்ச கட்டணம் ரூ. 40 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், காலை 5 மணிக்கு துவங்கும் சேவை, நள்ளிரவு வரை செயல்படும் என்று உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். ரயில் கட்டணம் அதிகமாக உள்ளது. மக்களுக்கு இது சுமையாக இருக்கும் என்பதால், இதனை தான் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று கூற, மெட்ரோ ரயில் சேவை துவக்க விழாவை புறக்கணிக்க உள்ளதாக மகாராஷ்டிரா முதல்வர் பிருத்விராஜ் சவான் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.



மும்பையில் மெட்ரோ ரயில் நாளை முதல்

Category:

0 comments