குடியரசு தலைவர் உரையை பாராட்டிய ஜெயலலிதா

Unknown | திங்கள், ஜூன் 09, 2014 | 0 comments

Jayalaithaநாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் இன்று குடியரசு தலைவர் ஆற்றிய உரையின் அம்சங்களுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா வரவேற்பு தெரிவித்துள்ளார். நரேந்திரமோடி தலைமையிலான 16வது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. அதில் இன்று, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரை நிகழ்த்தினார்.


நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் இன்று குடியரசு தலைவர் ஆற்றிய உரையின் அம்சங்களுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா வரவேற்பு தெரிவித்துள்ளார். நரேந்திரமோடி தலைமையிலான 16வது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. அதில் இன்று, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரை நிகழ்த்தினார்.மத்திய அரசின் செயல் திட்டங்கள் குறித்த மேலோட்டமான பார்வையை வெளிப்படுத்துவதாக அந்த உரை அமைந்திருந்தது. பெண்களுக்கு நாடாளுமன்றம், சட்டசபைகளில் 33 சதவீத இட ஒதுக்கீடு, வேலைவாய்ப்பு பெருக்கம், தீவிரவாத எதிர்ப்பு, கடலோர பாதுகாப்பு அதிகரிப்பு, சார்க் நாடுகளுக்கு மறைமுக எச்சரிக்கை என பன்முக தன்மை கொண்டதாக அந்த உரை இருந்தது. குடியரசுத் தலைவரின் இந்த உரைக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா வரவேற்பு தெரிவித்து புகழாரம் சூட்டியுள்ளார். முதல்வர் ஜெயலலிதாவின் அறிக்கை: நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆற்றிய உரை முழுமையானதாக இருந்தது. வாக்களித்த மக்களின் நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் வகையில் அறிவிப்புகள் வெளியாகியிருந்தன. நாடு எதிர்கொண்டுள்ள முக்கிய சவால்கள் அனைத்தையும், பிரச்சினைகளையும் எடுத்துரைக்கும் வகையில் அமைந்திருந்தது. நீர் மேலாண்மையிலும், விவசாயத் துறையிலும் தனியார் பங்களிப்பு ஊக்குவிக்கப்படும் என்ற அறிவிப்பு குறிப்பிடத்தக்கது. விளையாட்டுத் துறை ஊக்குவிக்கப்படும், அனைவருக்கும் சுகாதார காப்பீடு செய்யப்படும் போன்ற அறிவிப்புகள் மிகவும் முற்போக்கானவை. 2019ம் ஆண்டிற்குள் பொது இடங்கள் கழிப்பிடமாக பயன்படுத்தப்படுவது ஒழிக்கப்படும் என்ற திட்டம் மிகவும் உன்னதமானது. இந்த வரிசையில் தமிழக அரசு 2015க்குள் தமிழகத்தில் பொது இடங்களை கழிப்பிடமாக பயன்படுத்தப்படுவது ஒழிக்கப்படும் என உறுதி பூண்டுள்ளது. நாடாளுமன்றம், சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வலியுறுத்தியுள்ளதை வரவேற்கிறேன். மாநில காவல்துறைகளை நவீனப்படுத்த மத்திய அரசு உதவி செய்யும் என குடியரசுத் தலைவர் அறிவித்திருக்கிறார். தமிழக அரசுக்கு கூடுதலாக நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கிறேன். தொழில் மற்றும் கட்டுமானத் துறைகளில் வளர்ச்சிக்கு அறிவித்திருக்கும் திட்டங்கள் வரவேற்கத்தக்கது. 100 புதிய நகரங்கள், 50 புதிய சுற்றுலா மையங்கள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வரவேற்கிறேன். இதன் மூலம் தமிழகம் பயன் பெறும். குடியரசுத் தலைவர் உரை புதிய அரசாங்கத்தின் கொள்கைகளை எடுத்துரைத்துள்ளது. மக்கள் எதிர்பார்ப்பையயும் அதிகரித்துள்ளது. அரசாங்கம் மக்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என நம்புகிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தமது அறிக்கையில் கூறியுள்ளார்.



குடியரசு தலைவர் உரையை பாராட்டிய ஜெயலலிதா

Category:

0 comments