அடுத்த 24 மணி நேரத்துக்குள் மழை

Unknown | திங்கள், ஜூன் 09, 2014 | 0 comments

Rainதமிழகம் மற்றும் புதுவையின் ஒரு சில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கத்தரி முடிவடைந்த பிறகும் கோடையின் தாக்கம் தொடர்ந்து வந்தது. இதற்கிடையே கடந்த வெள்ளியன்று கேரளாவில் தென் மேற்கு பருவ மழை தொடங்கியதால், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டது.


கடந்த சில நாட்களாக தமிழகத்தின் சில பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. இதுவரை எட்டுக்கும் அதிகமானோர் மழைக்குப் பலியாகியுள்ளனர். சென்னையின் சில இடங்களில் நேற்றிரவு இடியுடன் கூடிய மழை பெய்தது. இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் கூறியதாவது : மத்திய கிழக்கு, தென் கிழக்கு அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும், மற்றும் ஓரிரு இடத்தில் மழை பெய்யும்.


இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். மேலும் காஞ்சிபுரம், காட்டுக்குப்பத்தில் 7 செ.மீ. மழையும், சென்னை கொளப்பாக்கம், கேளம்பாக்கம், செம்பரம்பாக்கம் பகுதியில் 6 செ.மீ மழையும் மற்றும் விமான நிலையத்தில் 5 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.



அடுத்த 24 மணி நேரத்துக்குள் மழை

Category:

0 comments