saniaமும்பை,


மும்பையில் தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திய முன்னணி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா அளித்த ஒரு பேட்டியில், ‘சமீபத்தில் உலக பெண்கள் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றேன். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் மூன்று கலப்பு இரட்டையர் பட்டத்தை கைப்பற்றி இருக்கிறேன். கிராண்ட்ஸ்லாமில் பெண்கள் இரட்டையர் பட்டத்தை வெல்வதே எனது அடுத்த இலக்கு. டென்னிசை விட்டு விலகும் முன்பு அந்த இலக்கை அடைந்து விடுவேன் என்று நம்புகிறேன்’ என்றார். 28 வயதான சானியா மிர்சா அடுத்த ஆண்டில் சீனத்தைபே வீராங்கனை சு–வெய் ஹூசையுடன் இணைந்து இரட்டையர் பிரிவில் விளையாட இருக்கிறார்.



சானியாவின் அடுத்த இலக்கு

vaபுதுடெல்லி


அனுஷ்கா சர்மாவுடனான காதலை இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ஒப்புக்கொண்டுள்ளார்.


அனுஷ்கா சர்மாவுடனான உள்ள உறவு பற்றி அதிகம் பேசும் பொதுமக்கள் தங்கள் பொதுஅறிவை பயன்படுத்த வேண்டும் என்றும் தங்ளது தனியுரிமை மதிக்கப்பட வேண்டும் என்று டெல்லியில் நடைபெற்ற பேஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது இவ்வாறு தெரிவித்தார்.


மேலும், அவர் கூறுகையில், “ இது வெளிப்படையாக சொல்லப்பட்டுள்ளது. நாங்கள் எதையும் மறைக்கவில்லை. எதையும் மறைக்கவும் முயற்சிக்கவில்லை. எதையும் மறைப்பதற்கும் நாங்கள் விரும்பவில்லை. ஆனால், இந்த விஷயத்தை நீங்கள் மீண்டும் மீண்டும் கேட்கும் போதும், இதை விவாதபொருளாக ஆக்கும் போதும், நாங்கள் இருவருமே இதை சரியானது என்று நினைக்கவில்லை.


இருவரும் எங்காவது ஒன்றாக தோன்றினால் இன்னும் மக்கள் இது உண்மைதானா? என்று கேள்வி கேட்கின்றனர். அப்பொழுது இது பொதுஅறிவு சம்பந்தப்பட்டதாகிறது. நீங்கள் இதை அறிந்த பொழுது ஏன் ஒரே கேள்வியை கேட்கிறீர்கள். இது மிகவும் தனிப்பட்ட விஷயம் என்பதால் இதை பற்றி தனிப்பட்ட முறையில் பேச நாங்கள் விரும்ப வில்லை” என்று தெரிவித்தார்.



அனுஷ்கா சர்மாவுடனான காதல் உண்மைதான்: விராட் கோலி ஒப்புதல்

gசென்னை,


சென்னையில் நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.2 ஆயிரத்து 523–க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.20 ஆயிரத்து 184–க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று மாலை நேர நிலவரப்படி, தங்கம் விலை குறைந்து காணப்பட்டது.


அதன்படி, கிராமுக்கு ரூ.21–ம், பவுனுக்கு ரூ.168–ம் குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.2 ஆயிரத்து 502–க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.20 ஆயிரத்து 16–க்கும் விற்பனை ஆனது.


அதே போல், சென்னையில் நேற்று முன்தினம் மாலை ஒரு கிராம் 38 ரூபாய் 80 காசுக்கும், ஒரு கிலோ ரூ.36 ஆயிரத்து 280–க்கும் விற்பனையான வெள்ளி, நேற்று மாலை கிராமுக்கு 10 காசும், கிலோவுக்கு ரூ.130–ம் குறைந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.36 ஆயிரத்து 150–க்கு விற்பனை செய்யப்பட்டது.



தங்கம் விலை பவுனுக்கு ரூ.168 குறைந்தது

vjவிஜய் படம் என்றாலே கமர்ஷியல், கலகலப்பு என தூள் பறக்கும். இந்நிலையில் இவர் சிம்புதேவன் இயக்கத்தில் நடித்து வரும் படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ருதி, ஹன்சிகா நடித்து வருகின்றனர்.ஸ்ருதியிடம் சமீபத்தில் இப்படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்கிறீர்கள், இதில் யாருக்கு முதன்மை கதாபாத்திரம் என்று கேட்டுள்ளனர்.அதற்கு அவர் ‘அதுப்பற்றி எல்லாம் எனக்கு கவலையில்லை, என் கதாபாத்திரம் தான் எனக்கு முக்கியம்’ என்று கூற இது ஹன்சிகாவை மிகவும் கோபப்படுத்தியுள்ளது.



விஜய் படத்தால் மோதிக்கொள்ளும் ஸ்ருதி-ஹன்சிகா!

rainநெல்லை,


நெல்லை மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட கலெக்டர் கருணாகரன் தெரிவித்துள்ளார். அதேபோல், கன்னியாகுமரி மாவட்டத்திலும் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தூத்துகுடியில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


நெல்லை மாவட்டத்தி்ல் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் நடைபெற இருந்த பருவத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் தெரிவித்துள்ளார். ரத்து செய்யப்பட்ட தேர்வு நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்



கன மழை: நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

140306-obama-ukraine-briefing-jsw-124p_0c3a31d984edfa75eff6ee4b71292e98வாஷிங்டன்


அமெரிக்க நாட்டில் 50 லடசத்துக்கும் அதிகமான வெளிநாட்டினர் உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக வசித்து வருகிறார்கள். இது 2008–ம் ஆண்டு நிலவரம். 2 லட்சத்து 40 ஆயிரம் இந்தியர்களும் சட்டவிரோதமாக அங்கு குடியிருப்போர் பட்டியலில் அடங்குவார்கள்.


இப்படி அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியிருப்போரின் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் சட்டம் இயற்றவேண்டும் என்பது அந்த நாட்டின் ஜனாதிபதியான ஒபாமாவின் விருப்பம்.


ஆனால், பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றுவதற்கு எதிர்க்கட்சியான குடியரசு கட்சி மறுத்து வருகிறது. இப்போது சமீபத்தில் நடந்த தேர்தல்களுக்கு பின்னர் இரு சபைகளிலும் அந்த கட்சி மெஜாரிட்டி பெற்று, அதன் கை ஓங்கி உள்ள நிலையில், ஒபாமா விருப்பப்படி சட்டம் நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை.


ஆனால் சமீபத்திய தேர்தலில் ஜனநாயக கட்சி தோல்வியைத் தழுவிய பின்னர் நாட்டு மக்களுக்கு உரை ஆற்றிய ஒபாமா, பாராளுமன்றத்தில் குடியரசு கட்சியுடன் இணைந்து செயல்பட தான் தயாராக இருந்தாலும், குடியுரிமை சீர்திருத்தம் போன்ற முக்கிய விஷயங்களில் பாராளுமன்றத்தின் முடிவை நிராகரிப்பேன் என திட்டவட்டமாக அறிவித்தார்.


இந்த நிலையில் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியிருப்போர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், குடியுரிமை விதிகள் தொடர்பாக ஒபாமா இந்த வார இறுதிக்குள் நிர்வாக உத்தரவு ஒன்றை பிறப்பிப்பார் கூறபட்டது. .


அதிபர் ஒபாமா நேற்று மாலை மிக தொலைநோக்கான குடியேற்ற நிர்வாக நடவடிக்கைகள் குறித்து டெலிவிஷனில் நேரடியாக உரையாற்றினார் அப்போது அவர் கூறியதாவது:-


அமெரிக்காவில் 50 லட்சம் மக்கள் நாடு கடத்தும் அச்சுறுத்தலில் உள்ளனர். இது பாதுகாப்பான தங்கும் இடமோ அல்லது மன்னிப்பு வழங்கும் சபையோ அல்ல.அதற்கு பதிலாக பொறுப்புடைமையோடு புலம பெயர்ந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் ஆவணமற்ற ஒப்பந்த வடிவம் கொண்டு வரவேண்டும். நீங்கள் விதிகளுக்கு சம்மதித்தால் நான் உங்களை நாடு கடத்தவில்லை என்பதை ஏற்கிறேன்.


இயேசுவே நாங்கள் ஒரு அந்நியனுக்கும் அநியாகம் செய்யக்கூடாது என புனித நூல் சொல்கிறது.நாம் அந்நியனின் இதயத்தை அறிந்து கொள்ள வேண்டும்.ஒரு காலத்தில் நாமும் அந்நியர்களாக இருந்தோம். லடசகணக்கானவர்களை நாடுகடத்துவது என்பது யதார்த்தமான் காரியம் அல்ல. பொது மன்னிப்பு என்பது நியாயமற்றதாக இருக்கும். நமது தன்மைக்கு மாறாக பரந்த நாடு கடத்தல் எனபது சாத்தியமற்றது. இதை விளக்கும் பொறுப்பு எனக்கு உள்ளது. ஒரு நடுநிலையான அணுகுமுறையை கையாள வேண்டும்.


ஒபாமா குடியரசு கட்சியின் விமர்சனங்களை நிராகரித்தார்.பாராளுமன்றம் தனது முடிவை சொல்லும். சட்டவிரோதமாக குடியேறியவர்கள் மீது நிர்வாக நடவடிக்கை எனபது பொது மன்னிப்புக்கு ஒப்பாகும்.விரிவான குடியேற்ற சீர்திருத்த சட்டம் விரைவில் கொண்டுவரவேண்டும் என வற்புறுத்தினார்.ஆனால் அதை குடியரசு கடசியினர் தடுத்து உள்ளனர்,

இன்று நமது குடியுரிமை சட்டம் சிதைந்து போய் உள்ளது அது எல்லோருக்கும் தெரியும்.பல சதாப்பதங்களா அது அப்படியே உள்ளது அதுபற்றி நாம் அதிகம் சிந்திக்கவில்லை என்று கூறினார்.


ஒபாமாவின் 10 நிமிட பேச்சில் குடியேற்ற நிர்வாக நடவடிக்கை அரசை அரசியல் ரீதியாக ஆத்திரமூட்டும் அம்சம் என்பதை சுட்டிகாட்டினார்.



50 லட்சம் பேர்ர் நாடுகடத்தும் அபாயம்: அமெரிக்க குடியுரிமை சட்டத்தை திருத்தி அமைக்க தீவிர நடவடிக்கை எடுக்கபடும் அதிபர் ஒபாமா அறிவிப்பு

sa‘எதிர்நீச்சல்’ டீமின் அடுத்த ஆட்டம் ‘காக்கிச்சட்டை’. ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் க்ரைம் பிராஞ்ச் போலீஸ் ஆபிஸராக நடிக்கிறார். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்த ‘காக்கிச்சட்டை’யில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடி சேர்கிறார் ஸ்ரீதிவ்யா. அதோடு, ‘3’, ‘எதிர்நீச்சல்’, ‘மான் கராத்தே’ படங்களைத் தொடர்ந்து இப்படத்திற்கும் இசையமைக்கிறார் அனிருத்.படப்பிடிப்பின் இறுதிக் கட்டத்தில் இருக்கும் ‘காக்கிச்சட்டை’யின் பாடல்களை டிசம்பர் 2ஆம் வாரத்தில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்களாம். அதோடு படத்தை வரும் ஜனவரி 26ஆம் தேதி வெளியிடவும் திட்டமிட்டிருக்கிறார்களாம்.



சிவகார்த்திக்கேயனின் காக்கி சட்டை பாடல் வெளியீட்டில் புதிய திருப்பம்

sonakshiசென்னை: ‘லிங்கா’ படத்தில் ரஜினி ஜோடியாக நடித்திருக்கிறார் சோனாக்ஷி சின்ஹா. படம் பற்றி அவர் கூறியதாவது:மொழி தெரியாத படத்தில் நடிக்கிறோமே என்ற தயக்கம் இருந்தது. அப்பாதான் (சத்ருஹன் சின்ஹா) ‘ரஜினி என் நண்பர், தைரியமாக நடி’ என்று நம்பிக்கை தந்தார். இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் காட்சிகளை எனக்கு அழகாக விளக்கினார். வசனங்களை ஆங்கிலத்தில் எழுதிக் கொடுத்துவிட்டார்கள். தமிழ் உச்சரிப்புக்கும், முகபாவத்துக்கும் ரஜினி உதவினார். அதனால் என்னால் எந்த பிரச்னையும் இல்லாமல் நடிக்க முடிந்தது. 1940களில் நடக்கும் கதை என்பதால் கண்களால் காதலை பரிமாறிக்கொள்ளும் காட்சிகள்தான் அதிகம். பாடல் காட்சிகளில் கூட நெருக்கம் இல்லை. நண்பரின் மகள் என்று அவர்தான் ஆரம்பத்தில் தயங்கினார். அவர் மீதிருந்த மரியாதை எனக்கு முதலில் தடையாக இருந்தது. போகப்போக சகஜமாகிவிட்டது. நல்ல கதையும், கேரக்டரும் அமைந்தால் தொடர்ந்து தமிழில் நடிப்பேன்.



ரஜினியுடன் கண்களால் காதல்- சோனாக்ஷி

dசென்னை: ரம்யாவை நீக்கிவிட்டு ராகினி திவேதியை ஒப்பந்தம் செய்கிறார் இயக்குனர்.’குத்து’ ரம்யா அரசியலுக்கு வருவதற்கு முன் ஒப்புக்கொண்ட கன்னட படம் ‘நீர் டோஸ்’. இதில் அவருக்கு நெகடிவ் கதாபாத்திரம். அரசியலுக்கு வந்தபிறகு இதுபோன்ற வேடத்தில் நடித்தால் தனது பெயர் கெட்டுவிடும் என்று தயங்கினார். திடீரென்று படத்திலிருந்து விலக முடிவு செய்தார். அவரை வைத்து சில காட்சிகளை படமாக்கிய இயக்குனர் விஜய பிரசாத் இதையறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுதொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.இந்நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த விஜயபிரசாத், ‘நீர் டோஸ் படத்தின் ஷூட்டிங் ரம்யா பிரச்னையால் தடைபட்டிருக்கிறது. அவருக்கு பதிலாக ராகினி திவேதி நடிக்க உள்ளார். அதன்பிறகு ஹீரோயின் நடிக்கும் காட்சிகளை மீண்டும் படமாக்க உள்ளேன்’ என்பதை தெரிவித்தார். கோர்ட்டில் வழக்கு இருப்பதால் இதுபற்றி இப்போதைக்கு விரிவாக பேச முடியாது என்றும் அவர் கூறினார். ரம்யாவிடம் கேட்டபோதும் வழக்கு இருப்பதால் இது பற்றி பேச முடியாது என்றார்.



ரம்யா திடீர் நீக்கம் இயக்குனர் தடாலடி